Categories: Uncategorized

அதீத வேகத்தினால் ஏற்படும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண தேவையான வேகத்தை அளவிடும் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு  ஐம்பது மில்லியன் ரூபாவை வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை  இலங்கை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது . அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற ளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோர் ஜனவரி 08, 2025 அன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் கையெழுத்திட்டனர்.

Off