பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் திரு.ஆனந்த விஜேபால அவர்கள் பொலிஸ் நிலையங்களின் நிலைமைகளை மதிப்பிடுவதற்காக 2025 ஜனவரி 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகம், வவுனியா, மாங்குளம், ஓமந்தை, கொடிகாமம், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் என்பவற்றிற்கும் விஜயம் செய்தார்.
தற்போதைய அரசாங்கத்தின்“கிளின் ஶ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்தில் பொலிஸாரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் வலியுறுத்தினார். மேலும் இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழித்தல், வாகன விபத்துக்களை தடுப்பது, அனைத்து வகையான தவறுகளையும் குறைத்தல், சட்டத்தின் கீழ் ஆட்சியை மீளமைத்தல், பொது சேவையில் மக்கள் மத்தியில் சிறந்த அணுகுமுறையை உருவாக்குதல், இலங்கை பொலிஸாரின் திறமையான சேவையை வழங்குதல் போன்றவற்றை அவர் வலியுறுத்தினார்.
மேலும் அமைச்சர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்ததுடன் பிராந்திய ஒருங்கிணைப்பு நிலையத்தையும் திறந்து வைத்தார்.