இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் திரு. மசூத் இமாத் உள்ளிட்ட இராஜதந்திர குழு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றம் அலுவல்கள் அமைச்சர் கௌரவ திரு. ஆனந்த விஜயபால அவர்களை இன்று (2025.02.2) சந்தித்தனர்
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா துறை குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் சுற்றுலாதுறையை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இச் சந்திப்பில் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.ரவி செனவிரத்ன அவர்களும் பங்குபற்றிய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
