Categories: Latest News TA

2025 ஏப்ரல் 02 ஆம் திகதி, இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய ஆண்ட்ரூ பேட்ரிக் அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் திரு. ரவி செனெவிரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், முக்கிய பாதுகாப்பு மற்றும் கொள்கை விவகாரங்கள், பயிற்சித் திட்டங்கள் உட்பட பொலிஸ் நவீனமயமாக்கல், மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. தமயந்தி கருணாரத்ன, மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் திரு. பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Off