பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தலை இலக்காகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொலீஸ் சேவையின் சேவை மட்டத்தை மேம்படுத்துதல்.
போதைப்பொருள் தொல்லையிலிருந்து சமூகத்தை விடுவிக்கும் செயற்திட்டத்தை சமூக மட்டத்திலும், பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பிள்ளைகள் அரச மற்றும் தனியார் சேவை நிலையங்களை இலக்காகக் கொண்ட செயற்திட்டங்கள், சமய மையங்கள், சமூக அமைப்புகள், அரச மற்றும் தனியார் துறையுடன் அமுல்படுத்துதல்.
உள்ளக பாதுகாப்பை உறுதி செய்வதனை இலக்காகக் கொண்டு தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பாகப் பேணுவதற்காகக் கொள்ளை, ஆட்கொலை, சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் குற்றங்களைத் தடுத்தல், ஒடுக்குதல்.
நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும், விN~டமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் சுதந்திரமாக தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்குத் தேவையான பாதுகாப்பை எப்போதும் பேணுதல்.
வாகன பாவனையின் போது வீதிகளில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் வீதி விபத்துக்கள் காரணமாக இடம்பெறும் மரணங்கள், அங்கவீனமடைதல், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் போன்றவற்றைத் தடுத்தல் மற்றும் முறையற்ற மற்றும் கவனமற்ற வாகன செலுத்துகை, ஒழுங்கை மற்றும் வீதி சமிக்ஞைகளை மீறுதல், விN~டமாக மாநகர பிரதேசங்களில் முறையற்ற வாகன செலுத்துகை மற்றும் வீதியின் இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதன் காரணமாக ஏற்படும் வீதி நெருக்கடிகளைக் குறைத்து, முறையான வாகன செலுத்துகையை முறைமைப்படுத்தும் வழிமுறை மற்றும் சட்ட ரீதியான வரையறையை அமுல்படுத்துவதற்காகப் போக்குவரத்துப் பொலீஸ் மறுசீரமைக்கப்பட்டு நவீன தொழில்நுட்ப மற்றும் தந்திரோபாயங்களைப் பாவித்து நவீனமயப்படுத்துதல்.
தேசிய கொள்கை சட்டகத்தினுள் அரச சார்பற்ற அமைப்புகளின் கருமங்களை ஒருங்கிணைத்து நாட்டின் அபிவிருத்தி செயன்முறைகளில் பங்களிப்பு செய்ய வாய்ப்பளித்தல்.
குடிவரவு மற்றும் குடியகல்வு நிர்வாகத்தை நவீன மற்றும் திறமையான சேவையாக பராமரித்தல்.
தனிப்பட்ட அடையாளத்தின் உள்ளூர் உறுதிப்படுத்தலை மேற்கொள்ள உறுதிசெய்தல் பின்னணியை உருவாக்கல், நவீன மற்றும் திறமையான சேவையை பராமரித்தல்.
போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பொருத்தமான மூலோபாய திட்டங்களை செயல்படுத்துதல்.