இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ திரு.ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ திரு. சுனில் வட்டகல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (20) பத்தரமுல்ல, சுஹுருபாயவில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவது அமெரிக்காவின் நம்பிக்கை எனவும், அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் எனவும் திருமதி ஜூலி சாங் தெரிவித்தார்.
மேலும் அரசியல் செல்வாக்குகளிற்கு அப்பாற்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் புதிய அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் இணையவெளியின் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டhர்
இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ திரு.ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர் கௌரவ திரு.சுனில் வதகல, அமைச்சின் செயலாளர் திரு.ரவி செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.