பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் 118 பொதுப் பாதுகாப்புச் சேவையானது, தொலைபேசி மூலமாகப் பெறப்படும் முறைப்பாடுகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல், 118.pubsec.gov.lk எனும் அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் ஊடாகவும் பொதுமக்கள் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைப் சமர்ப்பிப்பதற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த இணையப்பக்கத்தின் மூலம் பொதுமக்கள் 24 மணிநேரமும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை மூன்று மொழிகளிலும் இணையவழியில் சமர்ப்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்க முடிவதுடன், அவற்றுடன் தொடர்புடைய குரல் பதிவுகள் மற்றும் புகைப்படங்களை இணைப்பதற்கான வசதியும் இத்தொகுதியில் உள்ளது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் பாடப்பரப்பிற்கு மேலதிகமாக, அமைச்சின் கீழ் உள்ள இலங்கை பொலிஸ், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், மறுவாழ்வுப் பணியகம் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தொடர்பாகவும் பொதுமக்கள் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை இந்த இணையப்பக்கத்தின் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும். அத்துடன், சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் இதன் மூலம் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
Copyright © 2026 Minister of Public Security and Parliamentary Affairs – Sri Lanka. All Rights Reserved.