பொதுமக்களின் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை 24 மணிநேரமும் இணையவழியில் சமர்ப்பிப்பதற்கான அணுகலாக 118 பொதுப் பாதுகாப்புச் சேவையின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் இயங்குகிறது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் 118 பொதுப் பாதுகாப்புச் சேவையானது, தொலைபேசி மூலமாகப் பெறப்படும் முறைப்பாடுகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல், 118.pubsec.gov.lk எனும் அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் ஊடாகவும் பொதுமக்கள் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைப் சமர்ப்பிப்பதற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த இணையப்பக்கத்தின் மூலம் பொதுமக்கள் 24 மணிநேரமும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை மூன்று மொழிகளிலும் இணையவழியில் சமர்ப்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்க முடிவதுடன், அவற்றுடன் தொடர்புடைய…
