பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சில் 2026 புத்தாண்டுப் பணிகள் ஆரம்பம்
பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, அமைச்சின் செயலாளர் திரு. ரவி செனவிரத்ன அவர்களின் தலைமையில், அனைத்து இணைந்த திணைக்களங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்வு ஒரு புதிய ஆரம்பத்தையும், பொதுச் சேவை, நல்லாட்சி மற்றும் நிறுவன ரீதியான ஒற்றுமைக்கான கூட்டு அர்ப்பணிப்பையும் அடையாளப்படுத்தியது. தேசிய முன்னுரிமைகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைச்சின் பணிகளைத் திறம்படவும் பொறுப்புடனும் நிறைவேற்றுவதற்கான…
